2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

றியல், அத்லெட்டிகோ வென்றன

Editorial   / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகள் வென்றுள்ளன.

றியல் மட்ரிட், 5-3 என்ற கோல் கணக்கில் றியல் பெட்டிஸை வென்றது. றியல் மட்ரிட் சார்பாக, மார்கோஸ் அஸென்ஸியோ இரண்டு கோல்களையும் சேர்ஜியோ றாமோஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸீமா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். றியல் பெட்டிஸ் சார்பாக, அய்ஸா மன்டி, சேர்ஜியோ லியோன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது.

அத்லெட்டிகோ மட்ரிட், 2-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிக் பில்பாபோவை வென்றது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக, கெவின் கமெய்ரோ, டியகோ கொஸ்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .