2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

றொஜர்ஸ் கிண்ண டென்னிஸ் தொடர்: மூன்றாவது சுற்றில் நடால், ஒஸாகா

Editorial   / 2019 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவில் இடம்பெற்றுவரும் றொஜர்ஸ் கிண்ண டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிக்கு, உலகின் இரண்டாம்நிலை வீரரான ரஃபேல் நடால், உலகின் இரண்டாம்நிலை வீராங்கனையான நயோமி ஒஸாகா ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர்.

தனது முதலாவது சுற்றுப் போட்டியில் இடையைப் பெற்றிருந்த நடப்புச் சம்பியனான ஸ்பெய்னின் நடால், நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் பிரித்தானியாவின் டாவ் இவான்ஸை 7-6 (8-6), 6-4 என்ற நேர் செட்களில் வென்றே மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

இந்நிலையில், தனது முதலாவது சுற்றுப் போட்டியில் இடையைப் பெற்றிருந்த உலகின் நான்காம்நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தியெம், நேற்று அதிகாலை இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் கனடாவின் டெனிஸ் ஷபொலொவ்வை வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, தனது முதலாவது சுற்றுப் போட்டியில் இடையைப் பெற்றிருந்த உலகின் ஐந்தாம்நிலை வீரரான கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிப்பாஸ், தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் 4-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் போலந்தின் ஹபேர்ட் ஹர்கஸ்ஸிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தனது முதலாவது சுற்றுப் போட்டியில் இடையைப் பெற்றிருந்த உலகின் ஆறாம்நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரி, நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் 7-6 (8-6), 2-6, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் பிரான்ஸின் றிச்சர்ட் கஸ்கட்டிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இதேவேளை, தனது முதலாவது சுற்றுப் போட்டியில் இடையைப் பெற்றிருந்த உலகின் எட்டாம்நிலை வீரரான கரென் காஞ்சனோவ், நேற்று அதிகாலை இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்காவை 6-4, 6-7 (3-7), 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

இந்நிலையில், தனது முதலாவது சுற்றுப் போட்டியில் இடையைப் பெற்றிருந்த உலகின் ஒன்பதாம்நிலை வீரரான டனில் மெட்வெடெவ், தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் பிரித்தானியாவின் கைல் எட்மன்டை வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

இதேவேளை, தனது முதலாவது சுற்றுப் போட்டியில் இடையைப் பெற்றிருந்த ஜப்பானின் ஒஸாகா, தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் ஜேர்மனியின் தட்ஜனா மரியாவை எதிர்கொண்டு 6-2 என முதலாவத் செட்டைக் கைப்பற்றியதைக் தொடர்ந்து அடிவயிற்றுக் காயம் காரணமாக தட்ஜனா மரியா போட்டியிலிருந்து விலகிய நிலையில் மூன்றாவது சுற்றுக்கு ஒஸாகா தகுதிபெற்றிருந்தார்.

இந்நிலையில், தனது முதலாவது சுற்றுப் போட்டியில் இடையைப் பெற்றிருந்த உலகின் மூன்றாம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் அலிஸன் றிஸ்கேயை 6-4, 6-7 (4-7), 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

இதேவேளை, தனது முதலாவது சுற்றுப் போட்டியில் இடையைப் பெற்றிருந்த உலகின் நான்காம்நிலை வீராங்கனையும் நடப்புச் சம்பியனுமான றோமானியாவின் சிமோனா ஹலெப், தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் 4-6, 7-5, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஐக்கிய அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடியை வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், தனது முதலாவது சுற்றுப் போட்டியில் இடையைப் பெற்றிருந்த உலகின் ஏழாம்நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் கட்டெரினா ஸினியாக்கோவாவை வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, தனது முதலாவது சுற்றுப் போட்டியில் இடையைப் பெற்றிருந்த உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், நேற்று அதிகாலை இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் பெல்ஜியத்தின் எலிஸே மேர்ட்டன்ஸை 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X