2024 மார்ச் 28, வியாழக்கிழமை

றொமேரோவுக்குப் புதிய ஒப்பந்தம்

Editorial   / 2017 ஜூலை 18 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் சேர்ஜியோ றொமேரோ, நீண்ட காலத்துக்கான புதிய ஒப்பந்தமொன்றில், தனது கழகத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ளார்.

ஆர்ஜென்டீனா அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் கோல் காப்பாளரான றொமேரோ, அடுத்த கோடைகாலத்துடன், ஒப்பந்தம் நிறைவடையும் நிலையை எதிர்நோக்கியிருந்தார்.

ஆனால், தற்போது அவர், ஆகக்குறைந்தது 2021ஆம் ஆண்டு வரையாவது, மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்துக்காக விளையாடவுள்ளார்.

டேவிட் டீ கியா, ஜோயல் பெரெய்ரா ஆகியோருடன், கழகத்தில் இவர் போட்டிபோட வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பந்தம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த றொமெரோ, "புதிய ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். உலகின் மிகப்பெரிய கழகத்தில் இருப்பதற்கு, யார் தான் விரும்ப மாட்டார்கள்?" என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X