2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

றோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் தொடர்: சம்பியனாகினர் நடால், அன்ட்றீசு

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவில் இடம்பெற்றுவந்த றோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் தொடரில், உலகின் இரண்டாம்நிலை வீரரான ரஃபேல் நடால், கனடாவின் பியன்கா அன்ட்றீசு ஆகியோர் சம்பியனாகியுள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் தற்போதைய உலகின் எட்டாம்நிலை வீரரான ரஷ்யாவின் டானியல் மெட்வடேவ்வை எதிர்கொண்ட நடப்புச் சம்பியனான ரபேல் நடால், 6-3, 6-0 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனாகிய தனது சம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

அரையிறுதிப் போட்டிகளில், உலகின் தற்போதைய ஒன்பதாம்நிலை வீரரான சக ரஷ்யரான கரென் காஞ்சனோவ்வை 6-1, 7-6 (8-6) என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு டானியல் மெட்வடேவ் தகுதிபெற்றிருந்த நிலையில், தான் அரையிறுதிப் போட்டியில் எதிர்கொள்ள வேண்டியிருந்த பிரான்ஸின் கயேல் மொன்ஃபில்ஸ் காயம் காரணமாக அரையிறுதிப் போட்டியிலிருந்து விலகிய நிலையில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு ஸ்பெய்னின் ரபேல் நடால் தகுதிபெற்றிருந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில் உலகின் தற்போதைய எட்டாம்நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை பியன்கா அன்ட்றீசு எதிர்கொண்டு முதலாவது செட்டில் 3-1 என முன்னிலை வகித்திருந்தபோது உபாதை காரணமாக செரீனா வில்லியம்ஸ் போட்டியிலிருந்து விலகிய நிலையில் பியன்கா அன்ட்றீசு சம்பியனாகியிருந்தார்.

அரையிறுதிப் போட்டிகளில், 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் மரி புஸ்கோவாவை செரீனா வில்லியம்ஸும், ஐக்கிய அமெரிக்காவின் சோஃபியா கெனினை 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் பியன்கா அன்ட்றீசுவும் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .