2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

றோமா வென்றது; இன்டர் தோற்றது

Editorial   / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் றோமா வென்றதுடன், இன்டர் மிலன் தோற்றுள்ளது.

உடினீஸ் அணியின் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் உடினீஸை றோமா வென்றது. றோமா சார்பாக, சென்கிஸ் அன்டர், டியகோ பெறோட்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில், 0-2 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலனை ஜெனோவா தோற்கடித்தது. ஜெனோவா சார்பாக, கொரன் பன்டேவ் ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .