2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

லிவர்பூலிருந்து கோச்சினியோவை கைச்சாத்திடுகிறது பார்சிலோனா

Editorial   / 2018 ஜனவரி 07 , பி.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் மத்தியகள வீரரான பிலிப் கோச்சினியோவை, 142 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்கள் ஒப்பந்தமொன்றில், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா கைச்சாத்திடவுள்ளனது.

அந்தவகையில், 25 வயதான பிலிப் கோச்சினியோவை பார்சிலோனா கைச்சாத்திடுவதன் மூலம் உடனடியாக 105 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களை லிவர்பூல் பெறவுள்ளதுடன், மிகுதியை பிலிப் கோச்சினியோவின் திறமை வெளிப்பாட்டின் அடிப்படையில் பெறவுள்ளது.

பிரேஸில் தேசிய கால்பந்தாட்ட அணியினதும் மத்தியகள வீரரான பிலிப் கோச்சினியோவை, இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனிடமிருந்து 8.5 மில்லியன் ஸ்டேர்லின் பவுண்ஸ்களுக்கு, 2013ஆம் ஆண்டு ஜனவரியில் இன்டர் மிலன் ஒப்பந்தம் செய்திருந்தது. லிவர்பூலுடன் புதிய ஐந்தாண்டு ஒப்பந்தமொன்றை கடந்தாண்டு ஜனவரியிலேயே பிலிப் கோச்சினியோ கைச்சாத்திட்டிருந்தார். எவ்வாறெனினும், குறித்த ஒப்பந்தமானது, வேறு கழகமொன்றால் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கான தொகையைக் கொண்டிருக்கவில்லை.

இந்நிலையில், பார்சிலோனாவுடன் ஐந்தரை ஆண்டுகள் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவுள்ள பிலிப் கோச்சினியோ, அவரை வேறு கழகங்கள் ஒப்பந்தம் செய்வதென்றால் 355 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களை செலுத்த வேண்டுமென்ற நிபந்தனையையும் தனது ஒப்பந்தத்தில் கொண்டிருக்கவுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில், ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் இப்பருவகாலத்தில் ஏற்கெனவே லிவர்பூலுக்காக விளையாடியதால், இப்பருவகாலத்தில் பார்சிலோனாவுக்காக சம்பியன்ஸ் லீக்கில் பிலிப் கோச்சினியோ விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் கடந்த கோடை கால வீரர்கள் ஒப்பந்தம் செய்யும் காலப் பகுதியில், பிலிப் கோச்சினியோவை பார்சிலோனா ஒப்பந்தம் செய்வதற்கான மூன்று கோரிக்கைகளை லிவர்பூல் நிராகரித்ததோடு, பார்சிலோனாவுக்கு செல்வதற்காக பிலிப் கோச்சினியோவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் லிவர்பூல் நிராகரித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X