2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’லிவர்பூலுக்கு எதிரான தோல்வி நாசகரமானது’

Editorial   / 2017 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிவர்பூல் அணிக்கெதிராக நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில், 0-4 என்ற கோல் கணக்கில் கிடைக்கப்பெற்ற தோல்வி, நாசகரமானது என, ஆர்சனல் அணியின் முகாமையாளர் ஆர்சென் வெங்கர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இங்கிலாந்து பிறீமியர் லீக்கை வெற்றிகொள்ளும் எதிர்பார்ப்புடன் காணப்படும் இவ்விரு அணிகளும் மோதிய இப்போட்டியில், இரு அணிகளும் எதிர்பார்ப்புடன் களமிறங்கின.

போட்டியின் 17ஆவது நிமிடத்தில் றொபேர்ட்டோ ஃபிர்மினோ பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்ற லிவர்பூல், தொடர்ந்து 40ஆவது நிமிடத்தில் சாடினோ மனே, 57ஆவது நிமிடத்தில் மொஹமட் சாலே, 77ஆவது நிமிடத்தில் டானியல் ஸ்டரிட்ஜ் ஆகியோர் பெற்ற கோல்கள் மூலம், படுதோல்வியைத் தழுவியது.

ஏற்கெனவே அழுத்தத்தின் காணப்படும் ஆர்சென் வெங்கருக்கு, இந்தத் தோல்வி, மேலதிக அழுத்தத்தை வழங்கியது.

“மனரீதியாக, இது மிகவும் கடினமானது. பெறுபேற்றின் அடிப்படையிலேயே இந்த முடிவு கிடைத்துள்ளது. எமது பெறுபேறு, போதுமானது அன்று. மிகவும் ஏமாற்றந்தரும் திறமை வெளிப்பாடு. நாரகரமானது” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “அண்மைக்காலங்களில், பெரிய போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்டுள்ளோம். அதனால் தான், இந்தப் பெறுபேறு இன்னமும் ஏமாற்றமளிக்கிறது.

“இதிலிலுள்ள ஒரே நல்ல விடயம் என்னவென்றால், இதற்குப் பதிலளிக்க, எங்களுக்கு நேரமிருக்கிறது. காரணம், பருவகாலத்தில் ஆரம்ப காலப்பகுதியே இது” என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே, வெங்கரை முகாமையாளர் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் போட்டி முடிவிலும், அக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அது தொடர்பாக வெங்கரிடம் கேட்டபோது, “அதற்குப் பதிலளிக்க நான் விரும்பவில்லை. பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் உணரும் விதம் இது. ஆனால், நாங்கள் இவ்வாறு தோற்கும் போதும் கூட, இரசிகர்கள் எங்களுடன் இருக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

இதேவேளை, ஏனைய போட்டிகளில், எவேர்ட்டன் அணியை 2-0 என்ற கணக்கில் செல்சி அணி வெற்றிகொண்டது. வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் - ஸ்டோக் சிற்றி அணிகளுக்கிடையிலான போட்டியும், டொட்டென்ஹம் ஹொஸ்ட்பர் - பேர்ண்லி அணிகளுக்கிடையிலான போட்டியும், 1-1 என்ற கோல் கணக்கில், சமநிலையுடன் முடிவடைந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .