2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

லிவர்பூலை வீழ்த்திய சிற்றி

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாடக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நடப்புச் சம்பியன்களான லிவர்பூலின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது.

சிற்றி சார்பாக, இல்கி குன்டோகன் இரண்டு கோல்களையும், ரஹீம் ஸ்டேர்லிங்க் மற்றும் பில் பொடென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மொஹமட் சாலா பெற்றார்.

இந்நிலையில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி சமப்படுத்தியிருந்தது.

அந்தவகையில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 50 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் சிற்றி காணப்படுகின்றது. 45 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும், 43 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லெய்செஸ்டரும், 40 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் லிவர்பூலும் காணப்படுகின்றன. இதில், மற்றைய அணிகளை விட சிற்றி ஒரு போட்டியில் குறைவாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .