2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

லிவர்பூல், சிற்றி, டொட்டென்ஹாம் வென்றன

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில், லிவர்பூல், மன்செஸ்டர் சிற்றி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் உள்ளிட்ட அணிகள் வென்றதோடு, மன்செஸ்டர் யுனைட்டெட், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

தமது மைதானத்தில் இடம்பெற்ற செளதாம்டன் அணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது. லிவர்பூல் சார்பாக, ஜோயல் மட்டிப், மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது.

இந்நிலையில், கார்டிப் சிற்றி அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, றியாட் மஹ்ரேஸ் இரண்டு கோல்களையும் சேர்ஜியோ அகுரோ, பெர்னார்டோ சில்வா, இல்கி குன்டோகன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, பிரைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் வென்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் அணி சார்பாக, ஹரி கேன், எரிக் லமெலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, பிரைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்டோனி நொக்கயேட் பெற்றார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் இடம்பெற்ற வொல்லவர்ஹம்ப்டன் வொன்டரரேஸ் அணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் சமநிலையில் முடித்துக் கொண்டது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை பிரட் பெற்றதோடு, வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸ் அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோவா மூட்டின்யோ பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .