2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

லிவர்பூல் – டொட்டென்ஹாம் போட்டி சமநிலை

Editorial   / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் முன்கள வீரர் ஹரி கேன் இறுதிக் கணத்தில் பெற்ற கோலால், லிவர்பூல், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று இடம்பெற்ற இப்போட்டியின் மூன்றாவது நிமிடத்திலேயே தமது முன்கள வீரர் மொஹமட் சாலாவின் மூலம் கோலொன்றைப் பெற்ற லிவர்பூல் முன்னிலை பெற்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் மத்தியகள வீரர் எரிக் டயர் பின்னோக்கி வழங்கிய பந்துப்பரிமாற்றமொன்றை இடைமறித்தே இக்கோலைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், போட்டி முடிவடைய 10 நிமிடங்கள் இருக்கும் வரையில் மேற்குறித்த கோலே இப்போட்டியில் பெறப்பட்ட ஒரேயொரு கோலாக இருக்கையில், மாற்றுவீரராகக் களமிறங்கிய டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் மத்தியகள வீரரான விக்டர் வன்யமா, லிவர்பூலின் கோல் காப்பாளர் லொரிஸ் காரியஸால் தடுக்கப்பட்ட பந்தை, கோல் கம்பத்திருந்து 25 அடி தூரத்திலிருந்து கோலாக்கி கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

இதனையடுத்த மூன்றாவது நிமிடத்தில், லொரிஸ் காரியஸால் ஹரி கேன் வீழ்த்தப்பட வழங்கப்பட்ட பெனால்டியை ஹரி கேன் உதைக்க அதை லொரிஸ் காரியஸ் தடுத்திருந்தார். தொடர்ந்து, 90ஆவது நிமிடங்களைத் தாண்டிய முதலாவது நிமிடத்தில் முன்னேறிச் சென்ற மொஹமட் சாலா பெற்ற கோலின் காரணமாக லிவர்பூல் மீண்டும் முன்னிலையைப் பெற்றுக் கொண்டது.

எவ்வாறெனினும், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் முன்கள வீரரான எரிக் லமெலாவுடன் லிவர்பூலின் பின்கள வீரர் வேர்ஜின் வான் டிஜிக் மோதுண்ட நிலையில் போட்டியின் இறுதிக் கணத்தில் வழங்கப்பட்ட பெனால்டியை ஹரி கேன் கோலாக்க 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X