2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

லெய்செஸ்டரிடம் தோற்ற செல்சி

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 20 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், செல்சிக்குமிடையிலான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் செல்சி தோல்வியடைந்தது.

லெய்செஸ்டர் சார்பாக, வில்பிரைட் என்டிடி, ஜேம்ஸ் மடின்ஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 38 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லெய்செஸ்டர் காணப்படுகின்றது. 37 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும், 35 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும், 34 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் நடப்புச் சம்பியன்கள் லிவர்பூலும் காணப்படுகின்றன. இதில், லெய்செஸ்டரை விட சிற்றி இரண்டு போட்டிகள் குறைவாக விளையாடியுள்ளதோடு, யுனைட்டெட்டும், லிவர்பூலும் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .