2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

லெய்செஸ்டரிம் தோற்ற லிவர்பூல்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 14 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் தோற்றது.

லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மொஹமட் சாலா பெற்றிருந்தார். லெய்செஸ்டர் சார்பாக, ஜேம்ஸ் மடின்ஸன், ஜேமி வார்டி, ஹார்வி பார்ண்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருக்குமிடையிலான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி வென்றிருந்தது. சிற்றி சார்பாக, இல்கு குன்டோகன் இரண்டு கோல்களையும், றொட்றி ஒரு கோலையும் பெற்றனர்.

அந்தவகையில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 53 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் சிற்றி உள்ளது. 46 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லெய்செஸ்டரும், 45 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும், 40 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் லிவர்பூலும் உள்ளன. இதில், லெய்செஸ்டர், லிவர்பூல் ஆகியன மற்றைய இரண்டு அணிகளை விட ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .