2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

லெய்செஸ்டவை வென்றது லிவர்பூல்

Editorial   / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களிக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில், லிவர்பூல், செல்சி ஆகிய அணிகள் வென்றதுடன், மன்செஸ்டர் யுனைட்டெட், செளதாம்டன் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

லிவர்பூலுடனான போட்டியின் ஆரம்பத்தில், மூன்றாவது நிமிடத்திலேயேயே றியாட் மஹ்ரேஸிடமிருந்து பெற்ற பந்தை ஜேமி வார்டி கோலாக்க லெய்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றது. எனினும், போட்டியின் 52ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற மொஹமட் சாலா கோலெண்ணிக்கையச் சமப்படுத்தியதுடன், ஹரி மகூரியிடமிருந்து பெற்ற பந்தை போட்டியின் 76ஆவது நிமிடத்தில் கோலாக்க, 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.

எவ்வாறெனினும், இப்போட்டியில் பல கோல் பெறும் வாய்புகளை லிவர்பூல் தவறவிட்டிருந்தது. முதலாவது பாதியில் மட்டும் நான்கு வாய்ப்புகளை மொஹமட் சாலா தவறவிட்டிருந்தார். போட்டி முடிவடைய 10 நிமிடங்கள் மொஹமட் சாலா மாற்று வீரரொருவரால் பிரதியீடு செய்யப்பட்டிருந்த நிலையில் நொண்டியபடி சென்றிருந்தார். இது அவர் காயமடைந்துள்ளாரா என்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, லெய்செஸ்டர் சார்பாக இப்போட்டியிலும் முன்னைய போட்டிகளிலும் கோல்களைப் பெற்ற ஜேமி வார்டி, கோல்களைப் பெற உதவிபுரிந்த றியாட் மஹ்றேஸ் ஆகியோர் போட்டி முடிவடைய 15 நிமிடங்கள் இருக்கும் நிலையிலேயே பிரதியீடு செய்யப்பட்டமை விமர்சனத்தைச் சந்தித்துள்ளது.

இதேவேளை, செல்சி, 5-0 என்ற கோல் கணக்கில் ஸ்டோக் சிற்றியை வென்றது. செல்சி சார்பாக, அன்டோனியா ருடிகர், டனி ட்ரிங்வோட்டர், பெட்ரோ, வில்லியன், டேவிட் ஸப்பகொஸ்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், மன்செஸ்டர் யுனைட்டெட், செளதாம்டன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியின்போது செளதாம்டனின் பின்கள வீரர் வெஸ்லி ஹொடெட்டின் தலையுடன் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்கள வீரர் றொமேலு லுக்காக்குவின் தலை மோதுண்ட நிலையில், மைதானத்திலிருந்து அவர் ஸ்ரெச்சரில் எடுத்துச் செல்லப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .