2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வட்போர்ட்டை வென்றது மன்செஸ்டர் சிற்றி

Editorial   / 2018 ஜனவரி 03 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகிய அணிகள் வென்றுள்ளன.

மன்செஸ்டர் சிற்றி, வட்போர்ட் அணிகளுக்கிடையிலான போட்டியில், இப்பருவகால பிறீமியர் லீக்கில் போட்டியொன்று ஆரம்பித்து வேகமாகப் பெறப்பட்ட கோலாக, லெரோய் சனே கொடுத்த பந்தை, போட்டி ஆரம்பித்து 38ஆவது செக்கனிலேயே ரஹீம் ஸ்டேர்லிங் கோலாக்கி சிற்றிக்கு முன்னிலை வழங்கினார். இதன்பின்னர், சிற்றியின் கெவின் டி ப்ரூனேயின் பந்துப் பரிமாற்றத்தை வட்போர்ட்டின் கிறிஸ்டியன் கபசெலி தனது கோல் கம்பத்துக்குள்ளேயே செலுத்த சிற்றியின் முன்னிலை இரட்டிப்பானது.

மோசமான காயமொன்று கெவின் டி ப்ரூனேக்கு ஏற்பட்டதாகத் தோன்றியபோதும் அதிலிருந்து அவர் குணமடைந்து இப்போட்டியில் அவர் ஆரம்பித்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பின்தொடை தசைநார் காயத்தால் ஒரு மாதம் விளையாடியிருக்காத பின்கள வீரர் ஜோன் ஸ்டோன்ஸும் இப்போட்டியில் தனது மீள்வருகையைப் புரிந்ததுடன், தனிப்பட்ட காரணங்களுக்கான இரண்டு போட்டிகளில் விளையாடியிருக்காத டேவிட் சில்வாவும் இப்போட்டியில் விளையாடியிருந்தார்.

இந்நிலையில், கெவின் டி ப்ரூனேயின் பிறீ கிக்கை கோல் கம்பத்துக்கு வட்போர்ட் கோல் காப்பாளர் ஹியூகேலி கோமிஸ் தட்டி விட்டிருந்தபோதும் பின்னர் கெவின் டி ப்ரூனேயின் பந்துப் பரிமாற்றமொன்றை ஹியூகேலி கோமிஸ் தட்டி விட, அது சேர்ஜியோ அகுரோவிடம் செல்ல, போட்டியின் 63ஆவது நிமிடத்தில் சிற்றியின் மூன்றாவது கோலை அவர் பெற்றார்.

போட்டியின் 82ஆவது நிமிடத்தில், வட்போர்ட்டுக்கு ஆறுதலாக, அன்ட்ரே கரில்லோவின் பந்துப் பரிமாற்றத்தை அன்ட்ரே கிரே கோலாக்கினார். இறுதியில், 3-1 என்ற கோல் கணக்கில் வட்போர்ட்டை மன்செஸ்டர் சிற்றி வென்றது.

இதேவேளை, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், 2-0 என்ற கோல் கணக்கில் சுவான்சீ சிற்றி வென்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, பெர்னாண்டோ லொரென்டே, டெலே அல்லி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .