2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விம்பிள்டன்: ஜோக்கோவிச், மரே வெளியே

Editorial   / 2017 ஜூலை 14 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முதலிரு இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ள அன்டி மரே, நொவக் ஜோக்கோவிச் ஆகியோர், காலிறுதிப் போட்டிகளுடன் வெளியேறினர்.

24ஆவது இடத்தில் நிலைப்படுத்தப்பட்டிருந்த ஐ.அமெரிக்காவின் சாம் குவரேயை எதிர்கொண்ட பெரிய பிரித்தானியாவின் அன்டி மரே, அதிர்ச்சித் தோல்வியடைந்தார். முதலாவது செட்டை 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய அவர், அடுத்த செட்டை 4-6 என இழந்தார். மூன்றாவது செட்டை 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் வென்ற அவர், வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதிரடியாக விளையாடிய சாம், அடுத்த 2 செட்களையும் 6-1, 6-1 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று, அரையிறுதிக்குத் தகுதிபெற்றார்.

ஐ.அமெரிக்க கிரான்ட் ஸ்லாம் தவிர, வேறு வகையான கிரான்ட் ஸ்லாம் தொடர்களில், அரையிறுதிக்கு முதன்முறையாக அவர் தகுதிபெற்றார்.

மற்றைய போட்டியில், சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச்சை, 11ஆம் நிலை வீரரான செக் குடியரசின் தோமஸ் பேர்டிச்சை எதிர்கொண்டார். இதில், முதலாவது செட்டை 6-7 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்த அவர், இரண்டாவது செட்டில் 0-2 என்ற புள்ளிகள் கணக்கில் பின்னிலையில் இருந்தார்.

அப்போது, அவருக்குக் காணப்பட்ட முழங்கை உபாதையின் வலி அதிகரிக்க, போட்டியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இதனால் தோமஸ் பேர்டிச், அரையிறுதிக்குத் தகுதிபெற்றார்.

முதலிரு வீரர்களும் வெளியேற்றப்பட்ட போதிலும், 3ஆம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், அரையிறுதிக்குத் தகுதிபெற்றார். முதலிரு வீரர்களையும் போலல்லாது, 10ஆம் நிலைக்குள் உள்ள கனடாவின் மிலோஸ் றாவோனிஸை (6ஆம் நிலை வீரர்) எதிர்கொண்ட பெடரர், நேர் செட்களில் வெற்றிபெற்றார்.

முதலாவது செட்டை 6-4 எனவும் இரண்டாவது செட்டை 6-2 எனவும் கைப்பற்றிய அவர், மூன்றாவது செட்டில் சற்றுப் போராடி, 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X