2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’விளையாடுவதால் காயம் மோசமடையாது என ஷகிப் கூறினார்’

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷின் டெஸ்ட், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸனின் விரலில் ஏற்பட்ட காயம் மோசமாகியுள்ளதைத் தொடர்ந்து, அக்காயம் எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்பட்டது என்பது தொடர்பாக சர்ச்சை நிலவுகின்ற நிலையில், விளையாடினால் காயம் மோசமடையுமான என தான் ஷகில் அல் ஹஸனை வினவியபோது அவர் இல்லை எனக் கூறியதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹஸன் தெரிவித்துள்ளார்.

தனது வசிப்பிடத்தில் திடீரென நேற்று நடாத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்குறித்த கருத்தை வெளிப்படுத்திய நஸ்முல் ஹஸன், “இவ்வாறான பெரிய ஆபத்தொன்றை எடுக்க வேண்டாம் என நான் அவரை வினவினேன். வைத்தியரொருவரின் சென்று பேசுமாறு நான் கூறினேன். பின்னர் இது பிரச்சினையல்ல என உடற்கூற்று நிபுணர் தனக்கு கூறியதாக அவர் தெரிவித்தார்” என மேலும் கூறியுள்ளார்.

இது தவிர, பின்னர் வைத்தியரொருவருடன் பேசித் தீர்மானிக்குமாறு தான் அவரை வினவியதாகத் தெரிவித்த நஸ்முல் ஹஸன், தான் ஹஜ்ஜிலிருந்து திரும்பிய நான்கு நாட்களின் பின்னர் அமெரிக்காவிலிருந்து நேரடியாக குழாமுடன் ஷகிப் இணைந்து கொள்வார் என பயிற்சியாளர் தனக்கு மின்னஞ்சலில் அறிவித்ததாகக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் காயமடந்த தனது விரலை சத்திரசிகிச்சை மேற்கொண்டு ஆசியக் கிண்ணத்த தவற விடுவதற்கான விருப்பத்தை ஷகிப் வெளிப்படுத்தியிருந்தபோதும் ஆசியக் கிண்ணம் கடினமான தொடர், இவ்வாறான தொடரொன்றில் ஷகிப் போன்ற வீரரொருவர் விளையாடாமல் விட்டால் அணியின் உயிர்ப்பு வீழ்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன எனத் தெரிவித்து ஷகிப் ஆசியக் கின்ணத்தில் பங்குபற்றவே நஸ்முல் ஹஸன் விரும்பியிருந்தார்.

அந்தவகையில், ஆசியக் கிண்ணத்தில் பங்குபற்றியிருந்த ஷகிப், தனது விரலிலுள்ள நோ தாங்க முடியாமல் போன நிலையில், பாகிஸ்தானுடான மெய்நிகர் அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக தொடரிலிருந்து வொலக வேண்டியிருந்தது.

பின்னர், அவர் பங்களாதேஷுக்கு திரும்பியபோது அவரது காயமடைந்த விரலில் இருந்த சிதல் அகற்றப்பட்டதுடன் அவ்விரல் தொற்றுக் குள்ளாகியமை காரணமாக குறைந்தது மூன்று மாதங்களுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, ஆசியக் கிண்ணத்தில் விளையாட வற்புறுத்தியிருக்காவிட்டால் ஷகிப்பின் காயம் மோசமடைந்திருக்காதென்றும் அவரின் விரல் வீங்கியிருந்தபோதும் பங்களாதேஷின் உடற்கூற்று நிபுணர் திஹன் சந்திரமோகன் தொற்றை ஏன் கண்டுபிடிக்கவில்லையென்றும் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .