2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வீரர்கள் கிராமத்தில் மருந்து ஊசிகள்; இந்தியர்கள் மீது சந்தேகம்

Editorial   / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீர வீராங்கனைகள் தங்கியுள்ள கிராமத்தில் மருந்து ஊசிகள் (syringes) கண்டுபிடிக்கப்பட்ட விடயமானது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

71 நாடுகளிலிருந்து, 18 பிரிவுகளில், 278 விளையாட்டுகளில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் பங்குகொள்ளவுள்ள,  21ஆவது விளையாட்டு பொதுநலவாய விளையாட்டு விழா நாளை மறுதினம் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீர வீராங்கனைகள் அனைவரும் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளதோடு, விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கென பிரத்தியேக கிராமமும் உருவாக்கப்பப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கடும் சட்டதிட்டங்களுக்கு மத்தியில் வீர வீராங்கனைகள் தங்கியுள்ள குறித்த கிராமத்தில் மருந்து ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் விமர்சனங்களைத்  தோற்றுவித்துள்ளது.

இந்திய வீர வீராங்கனைகள் தங்கியுள்ள அறைகளுக்கு அருகிலேயே இந்த ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, இது ஊக்கமருந்து பாவனையுடன் தொடர்புடையதாக என்பதை அறிந்துகொள்ளும் நோக்கில் இந்திய வீர வீராங்கனைளகளுக்கு மரபணு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இந்திய ஆண்கள் குத்துச்சண்டை அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டியாகோ நியேவா "அணியின் வீரர் ஒருவர் உடல்நிலை சரியில்லை எனவும், அவருக்கு விட்டமின் ஊசி ஒன்று ஏற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமது அணி வீரர்கள் எவ்வித தவறான செயல்களிலும் ஈடுபடமாட்டார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .