2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன்

Editorial   / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில், 4-1 என்ற கோல் கணக்கில் றென்னோ அணியை பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக நேமர் இரண்டு கோல்களையும் கிலியான் மப்பே, எடின்சன் கவானி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

இப்போட்டியின் முடிவில், லீக் 1 புள்ளிகள் பட்டியலில் 47 புள்ளிகளைப் பெற்றுள்ள பரிஸ் ஸா ஜெர்மைன் தரவரிசையில் முதலிடத்தில் தொடருகின்றது. பரிஸ் ஸா ஜெர்மனை விட ஒன்பது புள்ளிகள் குறைவாக 38 புள்ளிகளைப் பெற்றுள்ள மொனாக்கோ, தரவரிசையில் இரண்டாமிடத்தில் காணப்படுகிறது, லயோனும் மர்ஸெய்யும் தலா 35 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோல் எண்ணிக்கை அடிப்படையில் லயோன் மூன்றாமிடத்திலும் மர்ஸெய் நான்காமிடத்திலுமுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .