2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வென்றார் ஹமில்டன்

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க கிரான்ட் பிறிக்ஸில், பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டலைத் தாண்டி, மெர்சிடிஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன் வெற்றிபெற்றுள்ளார்.

எவ்வாறெனினும் தனது நான்காவது போர்மியுலா வண் சம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றுவதற்கு, ஆகக் குறைந்தது மேலுமொரு பந்தயத்திலாவது ஹமில்டன் பொறுத்திருக்க வேண்டியுள்ளது.

நேற்று இடம்பெற்ற பந்தயத்தில் இரண்டாமிடம் பெற்ற வெட்டலை விட 66 புள்ளிகள் அதிகமாக ஹமில்டன் பெற்றுள்ள நிலையில், மீதமாகவுள்ள மூன்று பந்தயங்களிலிருந்து 75 புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

அந்தவகையில், மெக்ஸிக்கோவில் இவ்வாரம் நடைபெறவுள்ள பந்தயத்தில் வெட்டல் வெற்றிபெற்றாலும் ஐந்தாமிடத்துக்குள் ஹமில்டன் வந்தால் பட்டத்தை ஹமில்டன் கைப்பற்றுவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .