2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது முதலாவது டெஸ்ட்

Editorial   / 2018 பெப்ரவரி 04 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிலகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சிட்டகொங்கில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி இன்று நிறைவடைந்தது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 513 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மொமினுல் ஹக் 176, முஷ்பிக்கூர் ரஹீம் 92, பதில் அணித்தலைவர் மஹ்முதுல்லா 83, தமிம் இக்பால் 52, இம்ருல் கைஸ் 40 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சுரங்க லக்மா, ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் லக்‌ஷன் சந்தகான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, 9 விக்கெட்டுகளை இழந்து 713 ஓட்டங்களை இழந்தபோது தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், குசல் மென்டிஸ் 196, தனஞ்சய டி சில்வா 173, றொஷேன் சில்வா 109, அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 87, நிரோஷன் டிக்வெல்ல 62 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், தஜிகுல் இஸ்லாம் 4, மெஹெடி ஹஸன் மிராஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 5 விக்கெட்டுகளை இழந்து 307 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இரண்டு அணித்தலைவர்களும் இப்போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக் கொள்ள சம்மதித்திருந்தனர். துடுப்பாட்டத்தில், மொமினுல் ஹக் 105, லிட்டன் தாஸ் 94, தமிம் இக்பால் 41, மஹ்முதுல்லா ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ரங்கன ஹேரத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனாக, இரண்டு இனிங்ஸ்களிலும் சதம் பெற்ற முதலாவது பங்களாதேஷவராக தனது பெயரைப் பதித்துக் கொண்ட மொமினுல் ஹக் தெரிவானார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .