2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெள்ளிப் பதக்கம் வென்றார் சண்முகேஷ்வரன்

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், மலையகத் தடகளவீரரான குமார் சண்முகேஷ்வரன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இன்று காலை நடைபெற்ற 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியின் வெள்ளிப் பதக்கத்துக்கான போட்டியில் நேபாளத்தின் தீபக் அதிஹாரியுடன் சரிசமமாகச் சென்ற சண்முகேஷ்வரன், 30 நிமிடங்கள் 49 செக்கன்கள் 20 மில்லி செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.

போட்டித் தூரத்தை 30 நிமிடங்கள் 50 செக்கன்கள் ஆறு மில்லி செக்கன்களில் கடந்த தீபக் அதிஹாரி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றிருந்த நிலையில், போட்டித் தூரத்தை 29 நிமிடங்கள் 33 செக்கன்கள் 61 மில்லி செக்கன்களில் கடந்த இந்தியாவின் சுரேஷ் குமார் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

இந்நிலையில், இன்றைய மூன்றாம் நாள் போட்டிகளில், பெண்களுக்கான நீளம் பாய்தலில் 6.38 மீற்றர் தூரம் பாய்ந்து இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை சாரங்கி சில்வா பெற்றிருந்தார். உண்மையாக நீளம் பாய்தலில் பங்கேற்றிருக்காத சாரங்கி சில்வா, தனது முதன்மை நிகழ்வான முப்பாய்தலில் விதுஷா லக்‌ஷானி கவனஞ் செலுத்தும் பொருட்டு நீளம் பாய்தலில் இருந்து விலகிய நிலையிலேயே சாரங்கி சில்வா நீளம் பாய்தலில் கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை, 6.11 மீற்றர் தூரம் பாய்ந்த இலங்கையின் அஞ்சனி புலவன்ஷா வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் 21.19 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து வினோஷ் சுரஞ்சய வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றிருந்தார்.  21.15 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்த பாகிஸ்தானின் உஸைர் ரெஹ்மான் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .