2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஷஷாட்டின் ஒப்பந்தம் காலவரையற்ற இடைநிறுத்தம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடத்தைக் கோவை மீறலுக்காக ஆப்கானிஸ்தானின் ஆரம்பத் துடுப்பாட்டவீரரும் விக்கெட் காப்பாளருமான மொஹமட் ஷஷாட்டின் ஒப்பந்தத்தத்தை காலவரையற்ற ரீதியில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை இடைநிறுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் அனுமதியில்லாமல் தொடர்ந்து நாட்டை விட்டு மொஹமட் ஷஷாட் வெளியேறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இதுதவிர, உலகக் கிண்ணத்தின் போதான ஒழுக்க விடயமொன்று தொடர்பாக விசாரணைக்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒழுக்க செயற்குழுவால் அண்மையில் அழைக்கப்பட்டதாகவும், ஒழுக்க செயற்குழுவுடன் கடந்த மாதம் திட்டமிடப்பட்டிருந்த 20ஆம் திகதி மற்றும் 25ஆம் திகதி சந்திப்புகளில் கலந்துகொள்ளவில்லை என குறித்த அறிக்கையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேற்றப்பட்டது முதல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் மொஹமட் ஷஷாட் முரண்பட்டு வருகின்றார். தான் விளையாடத் தகுதியாகவுள்ளபோதும் தான் ஏன் உடற்றகுதியில்லை எனத் தீர்மானிக்கப்பட்டதாக தனக்கு தெரியவில்லை இல்லை முன்னர் தெரிவித்த ஷஷாட், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையிலுள்ள சிலர் தனக்கெதிராகச் செயற்படுவதாகத் தெரிவித்திருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .