2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஸ்கொட்லாந்துக்கெதிரான ODI தொடரை வென்றது இலங்கை

Editorial   / 2019 மே 22 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்கொட்லாந்துக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடரை இலங்கை வென்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட குறித்த தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டிருந்த நிலையில், எடின்பேர்க்கில் நேற்று  இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் வென்றதன் மூலமே 1-0 என தொடரை இலங்கை கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ஸ்கொட்லாந்து

இலங்கை: 322/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: திமுத் கருணாரத்ன 77 (88), அவிஷ்க பெர்ணான்டோ 74 (78), குசல் மென்டிஸ் 66 (56), லஹிரு திரிமான்ன ஆ.இ 44 (40) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிறட் வேல் 3/49 [10], சஃப்யான் ஷரிஃப் 2/76 [10], டொம் சோல் 1/52 [9])

ஸ்கொட்லாந்து: 199/10(வெற்றியிலக்கு 235 ஓட்டங்கள்) (33.2/34 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோர்ஜ் முன்சி 61 (42), மத்தியூ குறொஸ் 55 (71), கைல் கொயட்ஸியர் 34 (44) ஓட்டங்கள். பந்துவீச்சு: நுவான் பிரதீப் 4/34 [7], சுரங்க லக்மால் 2/55 [7], இசுரு உதான 1/31 [7])

போட்டியின் நாயகன்: நுவான் பிரதீப்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .