2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஸ்டார்க் 4ஆவது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்

Editorial   / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான மிற்செல் ஸ்டார்க்குக்கு சிட்னியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஸ்கான்களைத் தொடர்ந்து அவருக்கு பாரிய காயமில்லை எனத் தெரியவந்துள்ளபோதும் பொக்ஸிங் டே (டிசெம்பர் 26) அன்று ஆரம்பிக்கவுள்ள ஆஷஸின் நான்காவது போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்துடனான கடந்த திங்கட்கிழமை முடிவடைந்த மூன்றாவது ஆஷஸ் டெஸ்டின் இறுதி நாளன்று குதிக்கால் பிரச்சினையுடனேயே மிற்செல் ஸ்டார்க் பந்துவீச்சியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட ஸ்கானில் மிற்செல் ஸ்டார்க்குக்கு குதிக்கால் பிரச்சினை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளபோதும் அவுஸ்திரேலிய குழாமுடன் மெல்பேணுக்கு அவர் பயணிக்கவுள்ளதுடன், நான்காவது டெஸ்டுக்கு முன்பதாக அவர் சோதிக்கப்படவுள்ளார்.

நான்காவது போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை மிற்செல் ஸ்டார்க் அடையாவிட்டால், அவருக்குப் பதிலாக குழாமில் இடம்பெற்றுள்ள மேலதிக வேகப்பந்துவீச்சாளராக ஜக்ஸன் பேர்ட் விளையாடுவார்.

இடம்பெற்றுவரும் ஆஷஸ் தொடரின் முடிவடைந்த முதல் மூன்று டெஸ்ட்களிலும் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, நடப்பு ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராக மிற்செல் ஸ்டார்க் உள்ளார்.

ஆஷஸின் ஒவ்வொரு டெஸ்டிலும் மிற்செல் ஸ்டார்க், பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோரைக் கொண்டிருக்க விரும்புவதாகத் தெரிவித்த அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், ஆஷஸுக்குப் பின்னர் தென்னாபிரிக்கத் தொடரைக் கொண்டிருப்பதால், அதில் மிற்செல் ஸ்டார்க்கை கொண்டிருக்க விரும்புவதாகக் கூறியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .