2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஸ்பெய்ன், இத்தாலி வென்றன

Editorial   / 2019 மார்ச் 27 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் கூட்டமைப்பின் யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளில், ஸ்பெய்ன், இத்தாலி உள்ளிட்டவை வென்றுள்ளன.

மோல்டாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான குழு எவ் போட்டியொன்றிலேயே ஸ்பெய்ன் வென்றிருந்தது.

இப்போட்டியின் 31ஆவது நிமிடத்தில், நீண்ட தூரத்திலிருந்து வந்த பந்தொன்றை ஸ்பெய்னின் முன்கள வீரர் அல்வரோ மொராட்டா கோலாக்க முன்னிலை பெற்ற அவ்வணி, 73ஆவது நிமிடத்தில் தமது மத்தியகள வீரர் ஜெஸூஸ் நவாஸ் வழங்கிய பந்தை அல்வரோ மொராட்டா தலையால் முட்டிக் கோலாக்கியதோடு 2-0 என்ற கோல் கணக்கில் இறுதியில் வென்றது.

குறித்த போட்டியில், ஸ்பெய்னின் அணித்தலைவர் சேர்ஜியோ றாமோஸ், முன்கள வீரர் மார்கோ அஸென்ஸியோ, அல்வரோ மொராட்டா ஆகிய சிரேஷ்ட வீரர்கள் மாத்திரமே பங்கேற்றநிலையில், 24 அல்லது அதற்கு குறைந்த வயதுடைய ஆறு வீரர்கள் குறித்த போட்டியில் விளையாடியிருந்தனர். கோல் காப்பாளர் டேவிட் டி கியா, மத்தியகள வீரர்கள் சேர்ஜியோ புஷ்கட்ஸ், ஜுவான் மாத்தா, பின்கள வீரர் ஜோர்டி அல்பா, முன்களவீரர் றொட்றிகோ ஆகியோர் குறித்த போட்டியில் பங்கேற்றிருக்கவில்லை.

இதேவேளை, தமது நாட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற லிச்னெஸ்டைனுடனான குழு ஜெ போட்டியொன்றில் 6-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது. இத்தாலி சார்பாக, ஃபபியோ குவாக்லியரெல்லா இரண்டு கோல்களையும், ஸ்டெபனோ சென்ஸி, மார்கோ வெராட்டி, மொய்ஸே கீன், லியனார்டோ பவோலெட்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், தமது நாட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற டென்மார்க்குடனான குழு டி போட்டியொன்றை 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் சுவிற்ஸர்லாந்து முடித்தது. சுவிற்ஸர்லாந்து சார்பாக, றெமோ புரூலர், கிரனிட் ஸாகா, பிறீல் எம்பலோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், டென்மார்க் சார்பாக, மத்தியாஸ் ஜோர்ஜென்சன், கிறிஸ்தியன் ஜைட்கயர், ஹென்றிக் டல்ஸ்கார்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது நாட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற சுவீடனுடனான குழு எ எஃப் போட்டியொன்றை 3-3 என்ற கோல் கணக்கில் நோர்வே சமநிலையில் முடித்துக் கொண்டது. நோர்வே சார்பாக, பிஜொன் ஜோன்சன், ஜோஷுவா கிங், ஒலா கமாரா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, சுவீடன் சார்பாக, விக்டர் கிளாசென், றொபின் குவைஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமது நாட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற ஜோர்ஜியாவுடனான குழு டி போட்டியொன்றில், கோணர் ஹுரிஹானே பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து வென்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .