2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஸ்பொட் பிக்ஸிங்குக்காக அணுகப்பட்டார் ஷஷாட்

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஆசியக் கிண்ணத்தில், ஆப்கானிஸ்தான் பிறீமியர் லீக் இருபதுக்கு – 20 இல் ஸ்பொட் பிக்ஸிங்கில் ஈடுபடுவதற்காக ஆப்கானிஸ்தானின் விக்கெட் காப்பாளர் மொஹமட் ஷஷாட் அணுகப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அணி முகாமைத்துவத்துக்கு உடனடியாக குறித்த அணுகலை ஷஷாட் தெரியப்படுத்தியதாகவும் சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவிடம் குறித்த விடயத்தை பாரப்படுத்துவதற்கு அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் அடுத்த மாதம் ஐந்தாம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள ஆப்கான் பிறீமியர் லீக் இருபதுக்கு -20 தொடரின் ஆரம்பப் பருவகாலத்தில் பக்தியா அணியில் ஷஷாட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த தொடரில், பிரென்டன் மக்கலம், ஷகீட் அப்ரிடி உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் கிறிஸ் கெய்ல் உள்ளிட்ட இந்நாள் வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், டுபாயிலுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக நிகழ்வொன்றில் நேற்றுக் கருத்துத் தெரிவித்த சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்ஷல், கடந்த 12 மாதங்களில் சர்வதேச அணித்தலைவர்கள் ஐவர் அணுகப்பட்டுள்ளதாகவும் அதில் நான்கு பேர் முழு அங்கத்துவ நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தியுள்ளார். இதில், கடந்தாண்டு இடம்பெற்ற இலங்கைக்கெதிரான தொடரில் அணுகல் மேற்கொள்ளப்பட்டதை பாகிஸ்தானின் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் மட்டுமே பொதுவெளியில் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த 12 மாதங்களில் 32 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் எட்டு வீரர்களை சந்தேகநபர்களாகக் கொண்டிருந்ததாகவும் அலெக்ஸ் மார்ஷல் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .