2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஸ்மித், வோணருக்கு ஒரு வருட போட்டித் தடை?

Editorial   / 2018 மார்ச் 27 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், உப தலைவர் டேவிட் வோணர் ஆகியோருக்கு ஒரு வருட போட்டித்தடை விதிக்கப்பட்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் நடத்தைக் கோவையின் கீழ் மோசடி செய்தமைக்காக ஆயுட்காலத் தடை வரையிலான தடையை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் முன்னரே திட்டமிட்டு பந்தைச் சேதப்படுத்த முயன்றமைக்கான முழுமையான பொறுப்பாக ஸ்டீவ் ஸ்மித்துக்கு இரண்டு இடைநிறுத்தப் புள்ளிகளும் குறித்த போட்டியின் ஊதியத்தின் 100 சதவீதமும் அபாரதமாக சர்வதேச கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டது.

இதேவேளை, பந்தை சேதப்படுத்த முயன்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கமரோன் பான்குரோப்ட் போட்டித் தடையிலிருந்து தப்பித்த போதும் குறித்த போட்டி ஊதியத்தின் 75 சதவீதம் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் மூன்று குற்றப் புள்ளிகளும் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், போட்டியின் மூன்றாம் நாள் மதிய நேர இடைவேளையின்போது பந்தை சேதப்படுத்துதலை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைத்துவக் குழுவே திட்டமிட்டது என கூறப்பட்டிருந்தது.

வழமையாக ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணர், நேதன் லையன், மிற்சல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோரே தலைமைத்துவக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நிலையில், அன்று இடம்பெற்ற தலைமைத்துவக் குழு சந்திப்பில், தலைமைத்துவக் குழுவின் சிரேஷ்ட வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணர் ஆகியோர் மாத்திரமே இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X