2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஸ்மித், வோணர் பதவி நீக்கம் தற்காலிக தலைவரானார் பெய்ன்

Editorial   / 2018 மார்ச் 25 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய  கிரிக்கெட் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உபதலைவர் டேவிட் வோணர் ஆகிய இருவரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் இந்த அதிரடி நடவடிக்கைகையை எடுத்துள்ளது.

இதற்கமைய விக்கெட் காப்பாளர் டிம் பெய்ன் அணியின் தற்காலிக தலைமை பொறுப்பை ஏற்றிருப்பதாகவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி நீக்கும் நடவடிக்கைக்கு ஸ்மித் மற்றும் வோனர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முன்றாம் நாளான நேற்றைய தினம் தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி கொண்டிருந்த சமயத்தில், அஸ்திரேலிய  அணி வீர் கமரன் பேன்க்ரொப்ட் பந்தைத் தேய்க்க வெளியிலிருந்து கொண்டு வந்த ஒரு பொருளை பயன்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

பேன்க்ரொப்ட் பந்தைத் தேய்க்க மஞ்சள் நிறத்தில் ஒரு பொருளை பயன்படுத்தியதாக  தொலைக்காட்சியில் காட்டப்பட்டதை அடுத்து கடும் சர்ச்சைகள் தோன்றிய நிலையிலேயே இந்த பதவி நீக்க நடவடிக்கையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X