2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஸ்மித், வோணர், பான்க்ரொப்ட் ஆகியோரின் தடைகள் நீங்காது

Editorial   / 2018 நவம்பர் 21 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியமைக்காக, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் தடைக்குள்ளாக்கப்பட்டுள்ள ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோணர், கமரன் பான்க்ரொப்ட் ஆகியோரின் தடைகளை மீளாய்வு செய்வதற்கான மனுவை, அச்சபை நிராகரித்துள்ளது. எனவே, அம்மூவரின் தடைகளும், தொடர்ந்தும் அமுலிலிருக்கும்.

தென்னாபிரிக்காவின் நியூலன்டில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றின் போது, பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதைத் தொடர்ந்து, ஸ்மித்துக்கும் வோணருக்கும் தலா 12 மாதங்களும், பான்க்ரொப்டுக்கு 9 மாதங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

எனினும், பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தும் இந்த நடவடிக்கை காரணமாக, பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், அது தொடர்பான கலாசார மீளாய்வொன்றுக்கு உத்தரவிடப்பட்டது. இதில், பந்தைச் சேதப்படுத்தும் இந்நடவடிக்கைக்கு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் திணிக்கப்பட்ட கலாசாரமும் காரணமென முடிவு வழங்கப்பட்டிருந்தது.

எனவே, ஏற்கெனவே பல மாதங்கள் தடைகளை அனுபவித்துள்ள இம்மூவரின் தடைகளும் மீளாய்வு செய்யப்பட வேண்டுமென, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சங்கம் கோரியது. ஆனால், அந்த மனுவை ஆராய்ந்த பின்னர், அதில் மீளாய்வு தேவையில்லையென, சபை அறிவித்துள்ளது.

இதன்படி, அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை, ஸ்மித்தும் வோணரும், சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்ற முடியாது. மறுபக்கமாக, இவ்வாண்டு இறுதி வரை, கமரன் பான்க்ரொப்ட், சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்ற முடியாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .