2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹம்பாந்தோட்டையில் மீண்டும் போட்டிகள்

Editorial   / 2017 மே 24 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபையால், அண்மைக்காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்‌ஷ விளையாட்டரங்கில், மீண்டும் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ள சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளே, ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ளன.

மிக அண்மைக்காலத்தில் அமைக்கப்பட்ட இந்த மைதானம், கொழும்பிலிருந்து மிக அதிகமான தூரத்தில் காணப்படுவதால், போட்டிகளை நடத்துவதற்கு அதிக விருப்பத்துக்குரிய மைதானமாகக் காணப்பட்டிருக்கவில்லை. எனவே, கடந்த 2 ஆண்டுகளில், போட்டிகள் எவையும் நடத்தப்பட்டிருக்கவில்லை.

எனினும், மீண்டும் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பாக, இலங்கை கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், “தூரமாக அமைந்திருக்கும் காரணத்தால், விளையாட்டரங்கைப் பயன்படுத்துவதற்கு, அணிகள் மறுக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. மைதானத்திலிருந்து தற்போது எதுவித வருமானத்தையும் பெறாத நிலையில், வருடாந்தம் 18 மில்லியன் ரூபாய், அதன் அடிப்படைப் பராமரிப்புக்காகவும் தேவைகளுக்காகவும் செலவிடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

மைதானத்தை, மீண்டும் சர்வதேசப் போட்டிகளுக்குப் பொருத்தமானதாக மாற்றுவதைத் தவிர, பாடசாலை மட்டக் கிரிக்கெட்டையும் உள்ளூர்ப் போட்டிகளையும் இங்கு ஏற்பாடு செய்யும் முகமாக, 40 படுக்கைகளைக் கொண்ட தங்குமிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூன் மாதம் இங்கு வரும் சிம்பாப்வே அணி, முதலிரு போட்டிகளை கொழும்பிலோ அல்லது கண்டியிலோ விளையாடவுள்ள நிலையில், ஜூலை 6, 8, 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இறுதி 3 போட்டிகளும், ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ன. ஹம்பாந்தோட்டை மைதானத்தில், மின்னொளி வசதி காணப்படுகின்ற போதிலும், மின்சாரம், ஏனைய செலவுகள் மூலம் 10 மில்லியன் ரூபாயை மீதப்படுத்துவதற்காக, இம்மூன்று போட்டிகளும், பகல்நேரப் போட்டிகளாகவே நடைபெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .