2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஹொப்மன் கிண்ணத்தை வென்றது சுவிற்ஸர்லாந்து

Editorial   / 2018 ஜனவரி 07 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரும் பெலின்டா பென்சிச்சும் ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரே மற்றும் அங்கெலிக் கேர்பரைத் தோற்கடித்து, 2001ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக ஹொப்மன் கிண்ணத்தை வென்று கொடுத்துள்ளனர்.

முதலாவது போட்டியில், 6-7 (4-7), 6-0. 6-2 என்ற செட் கணக்கில் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை ரொஜர் பெடரர் வென்றார். எனினும் அங்கெலிக் கேர்பர், 6-4, 6-1 என்ற நேர் செட்களில் பெலின்டா பென்சிச்சை வெல்ல, கலப்பு இரட்டையர் போட்டி, ஹொப்மன் கிண்ணத்தை வெற்றியாளரைத் தீர்மானிப்பதாக மாறியது.

கலப்பு இரட்டை போட்டியில், 4-3 (5-3), 4-2 என்ற செட் கணக்கில் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், அங்கெலிக் கேர்பை ஜோடியை வென்ற ரொஜர் பெடரர், பெலின்டா பென்சிச் ஜோடி ஹோப்மன் கிண்ணத்தை சுவிற்ஸர்லாந்துக்கு பெற்றுக் கொடுத்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .