2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

1,000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Editorial   / 2018 ஜூலை 13 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய, விவசாய அமைச்சின் வழிகாட்டலில் நாட்டில் 1000 குளங்களை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்துக்கமைவாக, தெரிவு செய்யப்பட்ட குளங்கள் புனரமைப்பு செய்வதற்கான வேலைத்திட்டம் நேற்று (12) நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கமைய, வாழைச்சேனை கமநல சேவைகள் நிலைய பிரிவின் கீழ் உள்ள கள்ளிச்சை குளத்தை புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (12) இடம்பெற்றது.

வாழைச்சேனை கமநல அபிவிருத்தி பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.றஷீட் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர், எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொண்டதுடன், அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.பீ. ஜௌபர், என். கிருபைநாதன், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எச்.எம். ரஹீம் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

விவசாய அமைச்சின் ஐம்பது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்படும் இக் குளத்தின் மூலம், 200 ஏக்கர் வேளாண்மை இரு போகமும் செய்யலாம் என, கமநல அபிவிருத்தி பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.றஷீட் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .