2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

12 நாள்களில் 1,200 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் எண்ணக்கருவில் உருவான ஒரு கிலோகிராம் நெல்லை 50 ரூபாய்க்குக் கொள்வனவு செய்யும் திட்டத்தின்கீழ், கடந்த 12 நாள்களில் 1,200 மெற்றிக் தொன் நெல்லை, 260 விவசாயிகளிடமிருந்து 20 மில்லியன் ரூபாய்க்குக் கொள்வனவு செய்துள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை சுமார் 1 இலட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலப்பிரப்பில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட்டதாகவும் அதன் அறுவடை தற்போது நடைபெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 கமநல கேந்திர நிலையங்களிலும் தற்போது விசாயிகளிடமிருந்து அரசு நிர்ணயித்த விலைக்கு நெல் கொள்வனவு இடம்பெற்று வருகின்றது.

குறித்த நெல் கொள்வனவினூடாக இம்மாவட்ட விவசாயிகள் பெரும் நன்மையடைந்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .