2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

162 கி.கி கோழி இறைச்சி பறிமுதல்; ‌‌ரூ.20 ஆயிரம் அபராதம்

கனகராசா சரவணன்   / 2019 மார்ச் 13 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - காத்தான்குடியில் இருந்து பதியத்தலாவை பிரதேசத்துக்கு, படி ரக வாகனத்தில், சுகாதாரமற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட 162 கிலோகிராம் கோழி இறைச்சி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை உடன் அழிக்குமாறும்,   இறைச்சியை சுகாதாரமற்ற முறையில் எடுத்துச் சென்ற நபரை 20 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும், மட்டக்களப்பு நீதவான் றிஸ்வான், நேற்று (12) உத்தரவிட்டார்.

புல்லுமலை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பொன்னம்பலம் மனேகரன், கரடியனாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் த.ரவிவர்மா ஆகியோர், கொடுவாமடு பிரதேசத்தில் வீதியால் செல்லும் வாகனங்களை, நேற்று முன்தினம் நிறுத்தி, பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது, பதியத்தலாவை நோக்கிச் சென்ற குறித்த படி ரக வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, வாகனத்தில் புளி மூட்டைகளுடன், சுகாதாரமற்ற முறையில் 162 கிலோகிராம் கோழி இறைச்சிகளைக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அவ்வாகனத்தை ஓட்டி வந்தவரைக் கைதுசெய்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .