2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

28ஆவது நினைவேந்தல்

Editorial   / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா

கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 28ஆவது ஆண்டு நினைவேந்தல், பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக முன்றலில், இன்று (05) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீட மாணவர் ஒன்றியமும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நினைவேந்தல் நிகழ்வில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

1990ஆம் ஆண்டு, அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் ஊக்கிரமடைந்த நிலையில், உயிர் அபாயம் காரணமாக, கிழக்குப் பல்கலைக்கழக முகாமில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.

இவ்வாறு தஞ்சமடைந்தவர்களில், 158 பேர் , செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற சுற்றிவளைப்பின்போது, விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டனர்.

இதன்போது காணாமல்போனவர்களின் உறவினர்கள், மெழுகுதிரிகளைக் கைகளில் ஏந்தி, பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர் என்பதுடன், கண்ணீர் மல்க தமது கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

காணாமல்போன தமது உறவுகள் தொடர்பான தகவல்களை, அரசாங்கம் வழங்கவேண்டுமென்றும், அதற்கான அழுத்தங்களை, சர்வதேசம் வழங்கவேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .