2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

4 வீதிகளைத் தவிர காத்தான்குடி விடுவிப்பு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவின் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 04 வீதிகளைத் தவிர, ஏனைய அனைத்துக் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் முழுமையாக விடுவித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதையடுத்து, 41 நாட்களுக்குப் பின்னர் காத்தான்குடி வழமை நிலைமைக்கு திரும்பியுள்ளதுடன், காத்தான்குடியிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் சுகாதார நடைமுறைகளைப் பேணித் திறக்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் கொரோனா வைரஸ் பரவல் அச்ச நிலைமை காரணமாக கடந்தாண்டு டிசெம்பர் 31ஆம் திகதின்று தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டன.

பின்னர் ஜனவரி 21ஆம் திகதி 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டு, 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன. 

இந்நிலையில், மேற்படி 162 ஏ காத்தான்குடி 06 தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 162 பீ காத்தான்குடி 06 மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 164 காத்தான்குடி 04 கிராம உத்தியோகத்தர் பிரிவு, 164 பீ காத்தான்குடி 05 வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 164 ஏ காத்தான்குடி 05 கிராம உத்தியோகத்தர் பிரிவு, 164 சீ காத்தான்குடி 04 மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 காத்தான்குடி 01 கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 சீ புதிய காத்தான்குடி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 டீ காத்தான்குடி மேல் கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 ஈ காத்தான்குடி மத்திய கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய கிராம பிரிவுகளே விடுவிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, 166ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள சின்னத்தோனா வீதி, முஅத்தினார் வீதி, கபூர் வீதி, டெலிகொம் வீதி 1ஆம் குறுக்கு வீதி ஆகிய வீதிகள் மாத்திரம்  மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .