2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

61,280 ஏக்கரில் சிறுபோகச் செய்கை

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 மார்ச் 20 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2018 ஆண்டுக்கான சிறுபோகத்தில் 61,280 ஏக்கர் செய்கைப்பண்ணுவதென சிறுபோகக் கூட்டங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதில் பெரிய நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் 51,944 ஏக்கரும், சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் 9,336 ஏக்கரும் செய்கை பண்ணப்படவுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற விவசாய ஆரம்பக் கூட்டங்களின் அடிப்படையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சிறுபோகச் செய்கைக்கான திட்டமுகாமைத்துவக் கூட்டங்கள் விவசாய அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்று மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தினையடுத்து பிரதேச செயலக ரீதியாக ஆரம்பக்கூட்டங்கள் நடத்தப்பட்டு முடிவுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, போரதீவுப்பற்று - நவகிரி, தும்பங்கேணி, சிறு நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் உள்ள 12770 ஏக்கர் செய்கை பண்ணப்படவுள்ளது. மணிக்கு மண்முனை தென்மேற்கு - கடுக்காமுனை, புழுக்குணாவி, அடைச்ச கல், சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் 4130 ஏக்கர் செய்கை பண்ணப்படும்.

மண்முனை மேற்கு உன்னிச்சை, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான தீர்மானத்தின் படி அப்பிரிவுகளில் 12390 ஏக்கர் செய்கை பண்ணப்படும்.

ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள உறுகாமம், கித்துள்வௌ, வெலிகாகண்டி, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான தீர்மானத்தின்படி 11263 ஏக்கரில் இம்முறை விவசாயச் செய்கை நடைபெறும்.

கோரளைப்பற்று வடக்கு - கட்டுமுறிவு நீர்ப்பாசனம், மதுரங்கேணி, கிரிமிச்சை, சிறு நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் 2134 ஏக்கரிலும், கோரளைப்பற்று தெற்கு வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழுள்ள நீர்ப்பாசனக்காணிகளில் 18585 ஏக்கரிவல் இம்முறை விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .