2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மக்கள் பலம் அதிகரிப்பு’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஜனவரி 02 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிக்கான மக்கள் பலம் அதிகரித்திருப்பதாக, அக்கட்சியின் ஏறாவூர் அமைப்பாளரும் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.எல்.  அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று (02) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, சம காலத்தில் எழும் சமூகப் பிரச்சினைகளாக இருந்தாலென்ன, வாழ்வாதாரப் பிரச்சினைகளாக இருந்தாலென்ன அதற்கெல்லாம் உரிய வேளையில் பரிகாரம் காண்பதற்காக குரல் கொடுத்து வருவது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியேதான் என்பதை தற்போது மக்கள் நன்கு அறிந்து புரிந்து கொண்டுள்ளார்கள் என்றார்.

அனைத்து இன மக்களையும் அரவணைத்து, அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாகவும் இதனால் அதன் மதிப்பு மக்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிளவுபட்ட இலங்கைச் சமூகங்களாக நாங்கள் இருந்து அழிவுப் பாதையைத் தெரிவு செய்வதை விட, அனைவரும் ஓரணியில் திரண்டு அபிவிருத்திப் பாதையில் பயணிப்பதே மேலானதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த வகையில், கடந்த 2018ஆம் ஆண்டில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் அமீரலியின் அமைச்சினூடாக சுமார் 13 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதைப்போன்று, இன்னும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இன, மத பேதமின்றி வாழ்வாதார உதவிகளை வழங்க நாம் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் காலத்தில் மக்கள் பலம் பெற்ற சக்தியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கோலோச்சும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X