2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘அதிகார இழுபறிகளாலேயே நாடு அபிவிருத்திகளின்றி ஸ்தம்பித்துப் போயுள்ளது’

Editorial   / 2019 ஜனவரி 08 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஜனநாயக விரோத அதிகார மோகத்தினாலேயே நாடு தற்போது அபிவிருத்திகளின்றியும் முதலீடுகளின்றியும் முடங்கிப் போயுள்ளதாக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் நேற்று  (08)  வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசியமைப்பின் பிரகாரம் நாட்டின் ஜனநாயகம், மனித உரிமைகள், மக்களின் பாதுகாப்பு, மக்களாட்சி என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவை ஓரளவுக்கு நமது அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்படடிருந்தாலும் இனவாத அரசியல் மேலாண்மைத்தனம் காரணமாக இவற்றை உறுதிப்படுத்த ஆட்சியாளர்கள் தவறிக் கொண்டே வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அரசியலமைப்பின் பிரகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாது இழுத்தடித்துக் கொண்டே வருவது இதற்கு ஒரு உதாரணமாகுமென்றும், இது ஒரு ஜனநாயகவிரோத செயற்பாடாகவும் பார்க்கப்படவேண்டியுள்ளதென்றும் குறிப்பிட்டிருந்ததோடு, நாட்டின் ஒன்பது மாகாண சபைகளில் தற்போது ஆறு மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்டன என்றார்.

கலப்புத் தேர்தல் முறையைக் கொண்டு வந்து  கபட நாடகமாட எடுக்கப்படும் முயற்சியில் குறிப்பாக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் முழுமையாக இல்லாமற் செய்யப்படுகின்றதெனவும், எனவே, அரசாங்கம் பழைய விகிதார சார பிரதிநிதித்துவ முறையின்படி தேர்தல்களை நடத்தி சிறுபான்மையினருக்குள்ள ஜனநாயகத்தை உயிர்ப்பூட்ட உதவ வேண்டுமென்றும், நாட்டில்  முன்னெப்போதும்   இல்லாத வகையில்  தற்போது  தேர்தல்கள்  பிற்போடப்பட்டு வருகின்றன. இந்த ஜனநாயக மறுப்பு நிலை முடிவுக்குக் கொண்டு வரப்படாவிட்டால் மக்கள் அணிதிரள வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எனவே, இதுபற்றி அரசாங்கம் முக்கியத்துவமளித்துச் சிந்திக்க வேண்டும்  என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X