2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அனர்த்த முன்னாய்த்த பயிற்சி நெறி

Editorial   / 2018 டிசெம்பர் 11 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்

சமூதாய மட்டத்தின் ஊடாக, அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை நடைமுறைப்படுத்தல் திட்டத்தின் கீழ், அனர்த்தத் முன்னாயத்தச் செயற்பாட்டுக்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி, கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக  மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் ஒருங்கிணைப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (10) நடைபெற்றது.

இரு நாள்களைக் கொண்ட இப்பயிற்சியாளர்களுக்காக பயிற்சி நெறியில், மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பணியாற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நிர்வாகக் கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் நவரூபரஞ்சினி  முகுந்தன், சமுர்த்தித் திணைக்கப் பணிப்பாளர் திருமதி ஏ.பாக்கியராஜா, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பயிற்சி மற்றும் விழிப்புணர்வுப் பிரிவின் பணிப்பாளர் சுகத் திசநாயக்க, மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின் அதிகாரி கே.சூரியகுமார், சமுர்த்தித் திணைக்கள தலைமையக சிரேஸ்ட முகாமையாளர் சம்பா ஜானக ஓபதா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டமானது வெள்ளம், வரட்சி, சூறாவளி என இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படுகின்ற மாவட்டம் என்பதால் மாவட்டத்திலுள்ள மக்களை அனத்தத்துக்கு முன், அனர்த்த வேளை, அனர்த்தத்திற்கு பின் என அனைத்துக் காலங்களுக்கும் ஏற்ற வகையில் தயார் படுத்தும் வகையில் பயிற்சி நெறிகளையும் ஒத்திகைகளையும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .