2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘அனைத்து உறுப்பினர்களுக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஜனவரி 07 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகரசபை தன் மக்கள் நலன்சார்ந்த சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு கற்றுக் கொள்வதற்கு வசதியாக  அனைத்து உறுப்பினர்களுக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டுமென, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாநகரசபை  உறுப்பினர் கே. காந்தராஜா தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று (07) அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மக்களுக்குச் சேவையாற்றுவதற்காகவே, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு, மக்களால் தெரிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் நாம் மாநகர சபைக்கு வந்துள்ளோம். அதுவல்லாமல், வெறுமனே சபையில் அமர்ந்து விட்டு, வழங்கப்படும் கொடுப்பனவைப் பெற்றுக்கொண்டு செல்வதர்க்காக அல்ல.

“மட்டக்களப்பு மாநகரசபையால் ஒரு வருடத்துக்காக உருவாக்கப்பட்ட நிலையியற் குழுக்கள், மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கான தீர்மானம் இவ்வாண்டுக்கான முதலாவது அமர்வில் மேயரால் முன்மொழிவு செய்யப்பட்டு, தீர்மானமாகக் கொண்டு வரப்பட்டது.

“மாநகர சபையில் அமைக்கப்படும் நிலையிற் குழுக்களின் செயற்பாடுகள், ஒருவருடத்துக்குட்பட்டது எனக் கூறப்பட்டதற்கு இணங்க, அவை மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அக்குழுக்களின் செயற்பாடுகள் வினைதிறன் மிக்கதாக இருக்கும்.

“தொடர்ந்து ஒரே சாரார் ஒரு குழுவில் இருப்பதால் ஏனையவர்கள் மாநகர சபையின் வேலைகளை கற்றுக்கொள்ள முடியாமல் போய்விடுவதுடன்,  தொடர்ந்து அதே பதவியில் இருப்போரால் ஊழல் இடம்பெறவும் வாய்ப்புகள் உள்ளன.

“எனவே, குழுக்களை மாற்றியமைப்பதன் மூலம் அனைவரும் மாநகர சபையின் வேலைத்திட்டங்கள் என்னென்ன உள்ளன என்பதையும் அதன்மூலம் மக்களுக்கு எவ்வகையிலான சேவைகளை ஆற்ற முடியும் என்பதை அறிந்து, அதற்கேற்றவாறு செயற்பட சந்தர்ப்பம் கிடைக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .