2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அபராதம் அறவிடப்படும்; ஏறாவூர் நகர சபை அறிவிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வீதிகளில் திரியும் கட்டாக்காலிகளின் உரிமையாளர்களிடம் அபராதம் அறவிடப்படுமென, ஏறாவூர் நகர சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏறாவூர் நகர சபை தெரிவித்துள்ளதாவது, எமது நகரசபைக்குட்பட்ட பிரதான வீதி, புன்னக்குடா, ஆற்றங்கரையோர வீதிகளில் கட்டாக்காலி ஆடு, மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பாதசாரிகள், வாகன ஓட்டுநர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன், பல்வேறு விபத்துகளும் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

 மேலும், இக்கால்நடைகள், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கின்றன. எனவே, இவ்விடயத்தில் கால்நடை உரிமையாளர்கள் கூடிய கவனம் எடுக்குமாறும், பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் இக்கால்நடைகளின் நடமாட்டத்தைக் குறைப்பதற்கு நகரசபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இதனை மீறும் பட்சத்தில் அபராதம் அறவீடப்படுமெனப் பலமுறை அறிக்கைவிடப்பட்டுள்ளதாகவும், நகர சபை தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X