2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அம்புயுலன்ஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு

Editorial   / 2019 ஜனவரி 16 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள “1990  சுவசெரிய” இலவச அம்புயுலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை, மட்டக்களப்பு மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

கீழ்காணும் தகைமையுடைய 35 வயதுக்குட்பட்டவர்கள் இதில் கலந்துகொள்ள முடியுமென, அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர்

க.பொ.த உயர்தர உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் சித்தி அல்லது வேறு பாட பிரிவில் சித்தியுடன், தாதியர் அல்லது சுகாதாரம் சார்ந்த துறையில் சான்றிதழ் அல்லது டிப்ளோமா, ஆங்கிலத்தில் சிறப்புத் தேர்ச்சி, மாறுபட்ட நேரங்களில் பணியாற்ற விளைதல், குழுவாக தொழிற்படக்கூடிய, நேர்மறை எண்ணங்களுடையவராயிருத்தல் வேண்டும்.

அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளராக முன் அனுபவம் பெற்றிருத்தல் சிறப்புத் தகுதியாகக் கருதப்படும்.

அம்புலன்ஸ் வண்டி சாரதிகள்

க.பொ.த. சாதாரணதர சித்தி, கனரக வாகன அனுமதிப்பத்திரம் வைத்திருத்தல், இத்தொழிலில் குறைந்தது 2 வருட அனுபவம், மாறுபட்ட நேரங்களில் பணியாற்ற விளைதல், குழுவாக தொழிற்படக்கூடிய நேர்மறை எண்ணங்களுடையவராயிருத்தல் உள்ளிட்ட தகுதிகளையுடையவர்கள் நேர்முகப்பரீட்சையில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

1990  சுவசெரிய இலவச அம்புயுலன்ஸ் சேவையானது, இலங்கையின் மருத்துவமனை பராமரிப்பு அம்புலன்ஸ் சேவைகளின் முன்னோடியாகக் காணப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், இலங்கை அரசாங்கத்தால் தற்பொழுது மேல், தென் மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இந்த இலவச அம்புயுலன்ஸ் சேவையை, நாடளாவிய ரீதியில் விஸ்தரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர்கள் 650 பேரும், அம்புலன்ஸ் வண்டி சாரதிகள் 650 பேரும், நாட்டிலுள்ள மாவட்டச் செயலகங்களினூடாக இடம்பெறும் நேர்முகப்பரீட்சை மூலம் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .