2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘அரச ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா?’

Editorial   / 2018 நவம்பர் 26 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்களால், எதிர்வரும் ஜனவரியில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா என்பதுகூட சந்தேகமான நிலையிலே உள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம், பன்சேனை பாரிவித்தியாலயம் ஆகியவற்றிற்கிடையிலான மாபெரும் உதைப்பந்தாட்ட சமர், நேற்று  (25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரச திணைக்களங்களின் செயற்பாடுகளுக்காக அரசாங்கம் குறித்தளவிலான நிதியொதுக்குமெனவும் அந்நிதியைக் கொண்டு, உரிய திணைக்களங்கள் தமக்கான வேலைகளைச் செய்யுமெனவும் சுட்டிக்காட்டினால்.  

ஆனால், தற்போது நாட்டின் அரசியலில் பல்வேறான சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன எனத் தெரிவித்த அவர், இதனால், அடுத்த வருடத்துகக்கான வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமா, இல்லையா, தோற்கடிக்கப்படுமா எனக் கூறமுடியாதுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய சூழலில் இடைக்கால வரவு - செலவுத் திட்டமொன்று அமுல்படுத்தப்படாவிட்டால், அடுத்த ஜனவரியில் அரச ஊழியர்கள் மற்றும் பல இடங்களிலே பொருளாதார நெருக்கடியை சந்திக்கவிருக்கின்றோம் என எதிர்வுகூறிய அவர், குறிப்பாக சம்பளம் கிடைக்குமா? என்பதுகூட சந்தேகமாகவுள்ளதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X