2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரசாங்க கள உத்தியோகத்தர்கள் ‘பொறுப்புடன் செயற்படுங்கள்’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 மார்ச் 13 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராமங்கள் தோறும் சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்டுத்துவதற்காக பிரதேச மட்டத்தில் கடமையாற்றும்  அனைத்து அரசாங்க கள உத்தியோகத்தர்களும் கூட்டுப்பொறுப்புடன் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டுமென, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எம்.ஏ.ஜகுபர் தெரிவித்தார்.

ஒலுவில் பிரதேசத்துக்குப் பொறுப்பான சுகாதார துறை உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமசேவகர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பிரதேச மட்ட மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஒலுவில் 04ஆம் பிரிவு சுகாதார பராமரிப்பு மத்திய நிலையத்தில் இன்று (13) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும்  தெரிவிக்கையில்,

“நாட்டில் இன்று டெங்கு நோய் பாரிய சவாலாக மாறிவருகின்றது. தற்போது வானிலை மாற்றமடைந்து எல்லாப் பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது. இதனால் டெங்கின் பெருக்கம் அதிகரிப்பதற்கான சூழல் அதிகம் காணப்படுகின்றது.

“இந்நோயின் ஆபத்தை அறிந்து மக்களை விழிப்படையச் செய்வதுடன், டெங்கு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் அனைத்து உத்தியோகத்தர்களும் உதவ வேண்டும்.

“இதேவேளை, ஒலுவில் கரையோரப் கிராமசேவகர் பிரிவுகளில் பாடசாலை இடை விலகும் மாணவர்களினது எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பாரிய ஆபத்தான நிலைமைகளும் அதிகம் தோன்றிவருகின்றது.

“இந்நிலை இப்பிரதேசத்துக்கு மாத்திரமின்ற முழு நாட்டுக்கும் முழு சமூகத்திற்குமே பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.

“அரசாங்கம், பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு உதவிகளையும், புதிய திட்டங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. அதனை உரிய உத்தியோகத்தர்கள் பொறுப்புடன் செயற்பட்டு, உரிய தரப்பினரைச் சென்றடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .