2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

அரசியல் சீரழிவு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்த காலத்தில் இருந்த அரசியல் ஸ்திரத் - தன்மையை விட, தற்போது நாடு அதிக அரசியல் சீரழிவுகளைச் சந்தித்துக்கொண்டிருப்பதாக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார். 

சமகால அரசியல் கள நிலைவரங்கள் சம்பந்தமாக, நேற்று (04) அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே, மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். 

அதில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர், தற்போதைய ஸ்திரமற்ற அரசியல் இழுபறி நிலைமையால், நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிடுமோ என்ற அச்ச நிலை வர்த்தக சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ளதெனக் குறிப்பிட்டுள்ளார். 

அபிவிருத்திகள் முடங்கியுள்ளதாகவும் உற்பத்திகள் நலிவடைந்து சென்று கொண்டிருக்கின்றன என்றும், முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

“இவை எல்லாவற்றையும் விட, நாட்டு மக்கள் அவநம்பிக்கை அடைந்துள்ளார்கள். திட்டங்களை அமுல்படுத்தும் அதிகாரிகள், அரசியல் அதிகாரம் எப்படியாகுமோ என்ற அச்சத்தில் பணிப்புரைகளை ஏற்று திட்டங்களை அமுல்படுத்தத் தயங்குகிறார்கள். 

ஆக, ஒட்டு மொத்தத்தில் இந்த நாடு, உற்பத்திகள் இன்றியும் அபிவிருத்திகள் இன்றியும் உறைந்து போய் உள்ளது என்றும், உலகின் பல்வேறு நாடுகளிலுமுள்ளதுபோல், இந்த நாடும் சீரழிந்த இழுபறி அரசியலால் வங்குறோத்து நிலைக்குச் சென்றுவிடுமோ என்று பொருளாதார முயற்சியாளர்களும் முதலீட்டாளர்களும் தயங்குகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

“இத்தகைய சீரழிவான நிலைமைக்கு, ஒரு தரப்பாரை மட்டும் குற்றஞ்சாட்டுவதை விட, ஏதோவொரு வகையில் எல்லோருமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சிறுபான்மைச் சமூகங்களை ஏமாற்றி, அரசியல் நடத்த ஏங்கும் பேரினவாதம், இன்னமும் இந்த நாட்டைச் சீரழிப்பதிலேயே முழுமூச்சாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும்,  இது, முடிவுக்கு வராதவரை இந்த நாட்டுக்கு எந்த விமோசனமும் கிட்டப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .