2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘அரசியல் நிலைமைகளை புரிந்துணர்வுடன் அணுக வேண்டும்’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 மார்ச் 20 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் இங்கு ஒரு புரிந்துணர்வு அற்ற நிலை இருப்பதைத் தான் அவதானித்திருப்பதாகத் தெரிவித்தவட மாகாண சபை முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி. விக்னேஸ்வரன், எமது அரசியல் நிலைமைகளையும் நாங்கள் புரிந்துணர்வுடன் அணுக வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றதென்றார்.

மட்டக்களப்பு அமெரிக்க மிசன் கேட்போர் கூடத்தில், நேற்று (19) மாலை இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட சர்வமத அமைப்பின் உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் அமைப்பின் உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்,

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அனைத்து மதங்களும் அன்பில் தங்கியிருப்பதாகவும் இந்த அன்பு என்பது தான் மக்கள் அனைவரையும் இணைத்து, ஒன்றித்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

நாங்கள் சகோதரத்துவத்துடன் வாழும் போது, ஒருவரை ஒருவர் வெறுப்பதில்லையெனக் கூறிய அவர், எமது காரியங்கள், நாங்கள் செய்கின்ற விடயங்கள் வெறுப்புக்குள்ளாக்கக் கூடுமெனவும் இச்சந்தர்ப்பத்தில் காரியத்தை, அந்த நடவடிக்கைகயை நாங்கள் கண்டிக்க வேண்டுமே தவிர, மனிதனைத் தண்டிக்கத் தேவையில்லை என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.

தனது மட்டக்களப்பு விஜயத்தின் போது, இங்கு தனக்கு பல விதமான பிரச்சனைகள் தெரிவிக்கப்பட்டதாகவும் இவற்றில், இஸ்லாமிய மக்களின் பெருக்கம் நூற்றுக்கு ஐந்து வீதம், தமிழ் மக்களின் பெருக்கம் ஒரு புள்ளி இரண்டு வீதம், சிங்கள மக்களின் பெருக்கம் ஒரு புள்ளி எட்டு வீதமாக இருப்பதாகவும் அதனடிப்படையில், முஸ்லிம் மக்களின் பெருக்கத்தால், தமது வருங்காலம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் இருப்பதாகவும், சி.வி தெரிவித்தார்.

இந்த அச்சத்தின் நிமித்தம், முஸ்லிம் மக்களைத் தமிழ் மக்கள் ஓரளவுக்கு வெறுப்பதாகத் தெரிகின்றதெனவும் அக்காலத்திலே முஸ்லிம்களின் சூழலின் காரணமாக நபிகள் நாயகத்தால் பல்தாரமணம், விதவைகள் மணம் என்பன சொல்லப்பட்டதாக இருக்கின்றதெனவும் இதனை ஒரு காரணமாக வைத்து முஸ்லிம் மக்களை வெறுக்க வேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.  

தமிழ் மொழி எங்களை ஒன்றிணைத்து வைத்திருக்கும் போது, அந்த சகோதரத்துவத்தை நாங்கள் வலிறுத்தாமல், எங்களிடையே பலவிதமான முரண்பாடுகளை முன்நிறுத்திச் செல்வதால் தான் பல பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன எனவும் அவர் ​கூறினார்.

அந்தவகையிலே, எமது பிரச்சினைகளை முறையாக ஓரிடத்தில் இருந்து, நேரடியாகப் பேசி, அதனைத் தீர்க்கும் நிலையொன்று ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .