2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘அரசியல் மாற்றம், குடும்ப மாற்றம் என மகளிரிடமிருந்து மாற்றம் தேவை’

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரசியல் மாற்றம், குடும்ப மாற்றம், போதை மாற்றம், பிள்ளைகள் கல்வியில் வளர வேண்டும் என்ற மாற்றங்களை, மகளிரை வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்” என, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சுயதொழில் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிகளுடனான சந்திப்பு, ஒட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

“மது பாவனையில் மட்டக்களப்பு மாவட்டம் முதலாவது மாவட்டமாகத் திகழ்கின்றது. இதிலிருந்து மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமாக இருந்தால் மகளிருடைய பங்களிப்பு எங்களுக்குத் தேவையாக உள்ளது. போதைப்பாவனையில் இருந்து சிறந்த சமூகத்தை நாங்கள் உருவாக்க முடியாது.

“அரசியல் மாற்றமாக இருந்தாலும் சரி, குடும்ப மாற்றமாக இருந்தாலும் சரி, உங்கள் பிள்ளைகள் கல்வி நிலை வளரவேண்டும் என்ற மாற்றமாக இருந்தாலும் சரி, உங்களை வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.

“1983ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்தார்கள். அவ்வாறான சிறப்பு மிக்க சமூகத்தை உருவாக்குகின்ற வேலைத்திட்டங்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

“நாங்கள் இறுதித் தீர்வை நோக்கிப் பயணிக்கின்றோம். நல்லதைத் தெரிவு செய்யும் நீங்கள், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு நல்லதொரு அரசியல் தலைமை தேவை என்றும் சிந்தியுங்கள்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .