2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆசிரியர்களின் நியமனங்களுக்கு தனி அமைச்சரவைப் பத்திரம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஜூன் 25 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு ஆசிரிய நியமனம்; வழங்குவதற்காக,  கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தனியான அமைச்சரவைப் பத்திரமொன்றைச்  சமர்ப்பிக்கவுள்ளதாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், இன்று (25) தெரிவித்தார்

கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல், கல்வியமைச்சருடன் கடந்த 21ஆம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலின் போதே, கல்வி அமைச்சர் இதனை தெரிவித்ததாக அவர் கூறினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் ஏற்கெனவே அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அப்பத்திர அனுமதியின் பிரகாரம் கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்கள் பாதிப்படையும் நிலைமை காணப்பட்டது.

அமைச்சரவைத் தீர்மானத்தின் படி 2011ஆம், 2012ஆம் மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் மூன்று வருடங்களுக்கு குறையாமல் தொண்டர் ஆசிரியர்கள் பணியாற்றிருக்க வேண்டும். இவ்விடயம் கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தொடர்பாக முற்றிலும் பொருத்தமற்றதாக உள்ளது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாவும் அவர் கூறினார்.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 445 தொண்டர் ஆசிரியர்கள் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் சுட்டிக் காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .