2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

‘ஆதரவை மீள்பரிசீலனை செய்யும் நிலையேற்படும்’

வா.கிருஸ்ணா   / 2018 டிசெம்பர் 11 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் தமது ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள உள்ளூராட்சி சபைகளின் ஆதரவை மீள்பரிசீலனை செய்யும் நிலையேற்படுமென, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எச்சரித்துள்ளது.

தமது கட்சியின் தலைவர் கருணா அம்மான் தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீண்பழிகளைச் சுமத்தி உரையாற்றியுள்ளதாகவும் அது தொடர்பில் அவர்கள் பகிரங்க மன்னிப்பை தமது தலைவரிடம் கோரவேண்டும் எனவும் இல்லாவிட்டால் தாம் வழங்கிய ஆதரவை மீள்பரிசீலனை செய்வோம் எனவும் முன்னணியினர் எச்சரிக்கை விடுத்தனர்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, இந்த எச்சரிக்கையை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான து.நவரெட்னராஜா விடுத்தார்.

வவுணதீவில் பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டமையை முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மீது சுமத்தி, உண்மையை மறைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்படுவதாகவும் தமது கட்சியின் வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் இவ்வாறான வீண்பழி சுமத்தும் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .